வெற்றிலை விலை வீழ்ச்சி

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துாரில் நேற்று நடந்த வெற்றிலை வாரச்சந்தையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபா-ரிகள் வந்திருந்தனர். சந்தையில், 20க்கும் மேற்பட்ட கிராமங்-களை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
கடந்த வாரம், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்-றிலை, 4,000 முதல், 10,000 ரூபாய் வரை விற்றது. நேற்று, 4,000 முதல், 8,000 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வார்த்தை விட, 2,000
ரூபாய் விலை குறைவாக விற்பனையானது. சந்தையில் நேற்று மொத்தம், 20 வெற்றிலை மூட்டைகள், 1.40 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement