செஸ்: 9 வயது ஆரித் அபாரம்

புதுடில்லி: கார்ல்சனுக்கு எதிரான போட்டியில் சவால் கொடுத்து அசத்தினார் 9 வயது இந்திய வீரர் ஆரித்.
சர்வதேச செஸ் தொடர் 'ஆன்-லைனில்' நடந்தது. இந்தியாவின் 9 வயது வீரர் ஆரித் கபில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற உலகின் 'நம்பர்-1' நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 34, மோதினர். சமீபத்தில் முடிந்த 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் 2வது இடம் பிடித்த ஆரித் கபில், கார்ல்சனுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார் செலுத்தினார்.
25வது நகர்த்தலில் கார்ல்சன் தவறு செய்ய, ஆரித் ஆதிக்கம் செலுத்தினார். பின் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கார்ல்சன், போட்டியை 'டிரா' செய்து, தப்பித்தார்.

கடந்த ஆண்டு புவனேஸ்வரில் நடந்த சர்வதேச தொடரில் அமெரிக்காவின் ராசெட் ஜியாட்டினோவை வீழ்த்திய ஆரித் கபில், கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனை படைத்தார்.
இத்தொடரில் இந்தியாவின் பிரனவ் (10 புள்ளி) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை அமெரிக்காவின் ஹான்ஸ் நைமன் (9.5 புள்ளி), கார்ல்சன் (9.5) பிடித்தனர்.

Advertisement