சின்ன வெங்காயம் விலை உயர்வு
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் பாரப்பட்டி, வாழக்குட்டப்பட்டி, பள்ளித்தெருப்பட்டி, நாழிக்கல்பட்டி, சந்தியூர் உள்ளிட்ட இடங்களில் சின்னவெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளது. அவை ஓரிரு மாதங்களுக்கு பின் அறுவடைக்கு வரும். ஆனால் தற்போது, சின்னவெங்காயம் வரத்து குறைந்து, அதன் விலை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டியை சேர்ந்த உழவர் சந்தை விவசாயி தங்கவேல் கூறியதாவது:
தாதகாப்பட்டி உழவர் சந்தையில், 40 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ சின்னவெங்காயம், இன்று(நேற்று), 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. உள்ளூரில் சின்னவெங்காயம் உற்பத்தி குறைந்ததால், வெளிமாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. அதனால் விலை உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்பட்டுள்ள சின்னவெங்காயம், 50 நாட்களுக்கு பின் அறுவடைக்கு வரும். அதன் பின், விலை குறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மழை எதிரொலி: நிரம்பியது பில்லூர் அணை; பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு
-
வால்பாறையில் சிறுமியை கொன்ற சிறுத்தை சிக்கியது
-
பெங்களூரு நீர் பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூ.3,662 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்
-
சிகந்தூர் பாலம் திறன் சோதனை வெற்றி
-
பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 'இந்திரா கிட்' இலவச அரிசி விற்பனை தடுக்க நடவடிக்கை
-
காங்., ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்; பா.ஜ., மேலிட பொறுப்பாளர் உறுதி