பிராட்மேன் வழியில் சாதிப்பாரா பன்ட்

பர்மிங்ஹாம்: ஜாம்பவான்களான பிராட்மேன், லாரா, டிராவிட் வழியில், இந்தியாவின் ரிஷாப் பன்ட் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட், பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூலை 2ல் துவங்குகிறது.
கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்ஹாம் டெஸ்டில் 146 ரன் எடுத்திருந்த ரிஷாப் பன்ட், சமீபத்திய லீட்ஸ் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் (134, 118) கடந்தார். நல்ல 'பார்மில்' உள்ள இவர், இரண்டாவது போட்டியிலும் அசத்தினால், இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 3 டெஸ்டில் சதம் விளாசிய 7வது அன்னிய வீரர் ஆகலாம். ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், வாரன் பார்ட்ஸ்லி, சார்லஸ் ஜார்ஜ் மெக்கார்ட்னி, வெஸ்ட் இண்டீசின் பிரைன் லாரா, இந்தியாவின் ராகுல் டிராவிட், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், இப்படி சாதித்திருந்தனர்.
மேலும்
-
டிப்பர் லாரிகளால் தொடரும் விபத்துகள் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை
-
அரக்கோணம் அருகே தண்டவாளம் துண்டிப்பு
-
கத்திவாக்கம் பஜாரில் கடைகளை அகற்ற எதிர்ப்பு மாற்று ஏற்பாடு செய்ய அ.தி.மு.க., கோரிக்கை
-
ஏனாதிமேல்பாக்கம் - அயநல்லுார் சாலையை சீரமைக்க கோரிக்கை
-
வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
-
உழவரைத்தேடி வேளாண்மை திட்டம்