வேலைக்காக கண்ணுக்கெட்டிய துாரம் வரை நீண்டது வரிசை; இங்கல்ல, கனடாவில்!

புதுடில்லி: கனடாவில் சாதாரண வேலைக்கு கூட, நீண்ட வரிசையில் நுாற்றுக்கணக்கான பேர் காத்திருக்கும் வீடியோவை அங்குள்ள இந்திய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது.
இந்த வீடியோ, கனடாவில் வேலை நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வேலையின்மையை எடுத்துக்காட்டுகிறது. இது புலம்பெயர்ந்தோர் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோரிடமிருந்தும் ஏராளமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. காத்திருப்பவர்களில் பெரும்பாலானோர், இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர்.
வெளிநாடுகளில் வாழ்க்கை என்பது பலருக்கும் கனவாகவே இருக்கும். ஆனால், சில நேரங்களில் அது இப்படி வெறும் நீண்ட வரிசையாகக்கூட இருக்கும் என்று அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் காணப்படும் வரிசை, கண்ணுக்கெட்டிய துாரம் வரை நீண்டு கொண்டே செல்கிறது. சாதாரண அடிப்படை இன்டெர்ன்ஷிப் வேலைக்கு கூட இப்படி நீண்ட வரிசையில் இங்கு காத்திருக்கும் நிலை இருப்பதாக, அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில் அந்த பெண் கூறியிருப்பதாவது:
இது சர்வதேச மாணவர்களிடையே வேலைவாய்ப்புக்கான கடுமையான போட்டியை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகள் ஏராளமான வேலை வாய்ப்புகளையும் சிறந்த வாழ்க்கை முறையையும் உத்தரவாதம் அளிக்கின்றன என்று இந்தியர் பலர் பொதுவான நினைக்கிறார்கள்.
இங்குள்ள நிலைமையை பார்த்தால் உங்களுக்கே புரியும், வெளிநாடு சென்றுள்ளவர்கள் வேலைக்கு எப்படி காத்திருக்கிறார்கள் என்று தெரியும்.
இது கனடாவின் யதார்த்தம். நீங்கள் இதற்குத் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள் ,இல்லையெனில் இந்தியா சிறந்தது என்பது புரியும்.
இவ்வாறு அந்த பெண் பேசியுள்ளார்.
நெட்டிசன்கள் கூறுகையில், 'மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துவது குறித்த முதல் நேர்மையான வீடியோவை நான் பார்த்தேன். கனடாவுக்குச் செல்ல மக்களுக்கு தவறான தகவல்களையும் தோற்றத்தையும் கொடுக்க முயற்சிக்கும் பிற செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனர் என்று ஒருவர் கூறியுள்ளார்.
கனடா நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இதே நிலைமை தான் இருப்பதாக, நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.




மேலும்
-
2030ல் கோவையின் ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடி தாண்டும்; ஐ.டி.எப்., அளிக்கிறது நம்பிக்கை
-
'மொஹரம் சபை' 2ம் நாள் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-
மூடி இல்லாத 'மேன்ஹோல்' வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்
-
கால் உடைந்த பசுவுக்கு சிகிச்சை
-
ரேவதி கல்வி நிறுவனங்களில்மாணவர் சேர்க்கை மும்முரம்
-
தலைமறைவு குற்றவாளி சிக்கினார்