ஒரே மாதத்தில் 18 பேர்: ஹாசனில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்
ஹாசன்: ஹாசனில் ஒரே மாதத்தில் மாரடைப்பால் இறந்தோர் எண்ணிக்கை, 18ஆக உயர்ந்துள்ளது.
ஹாசனில் மாரடைப்பால், இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது, சுகாதார அதிகாரிகளுக்கு கவலை அளித்துள்ளது.
குறிப்பாக இளம்வயதினர் இறக்கின்றனர்.மே 20ம் தேதி, ஹாசன், ஹொளே நரசிபுராவின், மடிவாளா லே - அவுட்டில் வசிக்கும் தையல்காரர் வெங்கடேஷின் மகள் சந்தியா, ஜூன் 12ல், அம்பேத்கர் நகரின் கேசவா என்பவரின் மகன் நிஷாந்த், 19, மாரடைப்புக்கு பலியாகினர்.
இதுபோன்று, ஏற்கனவே 16 பேர் மாரடைப்பால் இறந்த நிலையில், நேற்று ஒரே நாளில், இருவர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாசனின், சித்தேஸ்வர நகரில் வசித்தவர் கோவிந்தா, 37; ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று காலை 7:00 மணியளவில், இவரது பெரியப்பாவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை கோவிந்தா, தன் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அவரை பரிசோதித்த டாக்டர், ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். மருந்து எழுதிக்கொடுத்து, வாங்கி வரும்படி கூறினார். கோவிந்தா தன் பெரியப்பாவை அங்கு அமர்த்திவிட்டு, மருந்து வாங்கி வரச் சென்றார். அப்போது அவருக்கு இதய வலி ஏற்பட்டது.
அவர் ஆட்டோவை ஓட்டிக்கொண்டு, அரசு மருத்துவமனைக்கு சென்றார். டாக்டர்களும் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்தார்.
ஹாசனின், கட்டாய பேரூராட்சிக்கு உட்பட்ட, ஹாரானே கிராமத்தில் வசித்தவர் கிரிஷ், 41. இவர் பி.எம்.டி.சி.,யில் நடத்துநராக பணியாற்றினார். விடுமுறை என்பதால், சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
நேற்று காலை வயலுக்கு சென்ற இவர், சோள பயிருக்கு உரம் போட்ட பின், வீட்டுக்கு வந்தார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு, கீழே விழுந்து உயிரிழந்தார்.
மேலும்
-
ஒடிசா ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்; 3 பேர் பலி; 50 பேர் காயம்
-
இஸ்ரேல் பிரதமர் மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு டிரம்ப் எதிர்ப்பு!
-
15 வயதில் வீடு வாங்கினேன்: ஓவியர் ஷ்யாம் நெகிழ்ச்சி
-
நிரம்புகிறது மேட்டூர் அணை; நீர் வரத்து 68 ஆயிரம் கனஅடி!
-
பிரியங்கா- வருண் சந்திப்பு: ராகுலுக்கு கசப்பு
-
உத்தரகண்டில் மேகவெடிப்பு; தொழிலாளர்கள் 9 பேர் மாயம்; மீட்பு பணிகள் தீவிரம்