விம்பிள்டன் டென்னிஸ்: சாதிப்பாரா அல்காரஸ்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஒற்றையரில் ஸ்பெயினின் அல்காரஸ் 'ஹாட்ரிக்' பட்டம் வென்று சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்கள் ஒற்றையரில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 7 முறை கோப்பை வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் களமிறங்குகின்றனர்.

விம்பிள்டனில் தொடர்ச்சியாக 2 முறை (2023, 2024) கோப்பை வென்ற அல்காரஸ், சமீபத்தில் பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இம்முறை அசத்தினால் விம்பிள்டனில் 'ஹாட்ரிக்' பட்டத்தை கைப்பற்றலாம்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் கோப்பை வென்ற சின்னர், பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்றிருந்தார். 'சூப்பர் பார்மில்' உள்ள இவர், இம்முறை சிறப்பாக செயல்படும் பட்சத்தில் விம்பிள்டனில் தனது முதல் பட்டத்தை வெல்லலாம். இதற்கு முன், 2023ல் அரையிறுதி வரை சென்றிருந்தார்.
25வது பட்டம்: இதுவரை 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச், விம்பிள்டனில் 7 முறை சாம்பியன் ஆனார். கடந்த இரு முறை (2023, 2024) விம்பிள்டனில் பைனல் வரை சென்ற இவர், 2023க்கு பின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை. இம்முறை எழுச்சி கண்டால், தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ருசிக்கலாம்.


சாதிப்பாரா சபலென்கா: பெண்கள் ஒற்றையரில் கோப்பை வெல்ல பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப், ஜெசிகா பெகுலா, மடிசன் கீஸ், போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா இடையே போட்டி நிலவுகிறது.


@quote@பரிசு எவ்வளவு
விம்பிள்டன் தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 622 கோடி. ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 35 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. 2வது இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ. 17 கோடி வழங்கப்படும். quote

Advertisement