ராமேஸ்வரம் மீனவர்கள் கைது வழக்கம் போல முதல்வர் கடிதம்

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம், 466 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், வழக்கம்போல் இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர்.
அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியை காட்டி எச்சரித்தனர். பின், படகுகள் மீது கற்களை வீசி தாக்கினர். பீதியடைந்தவர்கள் படகின் டிரைவர் கேபினுக்குள் பதுங்கி உயிர் தப்பினர்.
மேலும், கைதுக்கு பயந்து, அப்பகுதியில் மீன்பிடித்த 10க்கும் மேலான படகின் மீனவர்கள், வலைகளை வெட்டி மூழ்கடித்து விட்டு வெறும் படகுடன் ராமேஸ்வரம் கரை திரும்பினர்.
இந்நிலையில், அங்கு மீன்பிடித்த பாண்டியம்மாள் என்பவரது விசைப்படகை, இலங்கை வீரர்கள் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த மீனவர்கள் சேசு, 39, அண்ணாமலை, 55, உட்பட எட்டு பேரை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.
அவர்கள் மீது எல்லை தாண்டியதாக மீன்வளத் துறையினர் வழக்குப்பதிவு செய்து, வவுனியா சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வர் ஸ்டாலின் வழக்கம் போல கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்
-
தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!