பக்கவிளைவு இல்லாத ஹோமியோபதி கே.ஆர்.என்., மருத்துவமனை சாதனை

''உலகின் இரண்டாவது பிரபலமான மருத்துவ முறையாக ேஹாமியோபதி விளங்குகிறது. உடல், மனம், வாழ்க்கை, சூழ்நிலை என அனைத்திலும் முழு கவனம் செலுத்தி, எவ்வித நோயையும் மென்மையாக குணப்படுத்தும் ஆற்றல், இந்த மருத்துவ முறைக்கு உண்டு'' என்கிறார், கே.ஆர்.என்., ேஹாமியோபதி மருத்துவமனை டாக்டர் ராகிலா ரகுமான்.அவர் கூறியதாவது:

ஹோமியோபதி என்பது மென்மையும், ஆழமும் கொண்ட எளிமையான மருத்துவ முறை. 'ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும்' என்ற அடிப்படையில் நோய்களை குணமாக்குகிறது. நோயின் வெளிப்படையான அறிகுறி மட்டுமின்றி, அதன் உள்ளார்ந்த காரணங்களையும் கண்டறிந்து, மென்மையாக குணப்படுத்தும் ஆற்றல், இந்த மருத்துவ முறைக்கு உண்டு.

தனி நபருக்கே உரித்த, உடல் நலன், மனநிலை, வாழ்க்கை சூழல் மீது முழு கவனம் செலுத்தி சிகிச்சை வழங்கப்படுகிறது. பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது. தற்போதைய நிலையில், மன அழுத்தம், துக்கம் குறைபாடு, அலர்ஜி, ஆஸ்துமா, ஹார்மோன் கோளாறு, முகப்பரு, சொரியாஸிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற தோல் நோய்கள், தலைவலி, இரைப்பையில் அடிக்கடி வாயு தொல்லை மற்றும் செரிமான பிரச்னை, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ்; நீண்ட நாள் இடுப்பு மற்றும் மூட்டு வலி, கருத்தரித்தலில் உள்ள பிரச்னைகள், தைராய்டு, மாதவிடாய் கோளாறுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

குழந்தைகள் வாயில் மூச்சு விடுதல், தொண்டையில் கிருமி தொற்று, நுரையீரல் தொற்று மாதிரியான பிரச்னைகள், சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று, பித்தப்பை கற்கள், வயதானோருக்கு மூச்சுத்திணறல், நரம்பு சோர்வு, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு ஆகியவற்றுக்கு எவ்வித பக்க விளைவு இல்லாத, எளிமையாக தீர்வு வழங்குகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கும் சிகிச்சை உண்டு. மன அழுத்தம், பயம், துாக்கம் போன்ற மன நோய்களுக்குமான சிறந்த மருத்துவம், மனம் மற்றும் உடலுக்கான முழுமையான மருத்துவம். விவரங்களுக்கு 95003 - 00333, 96263 - 00660 எண்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement