மாற்றுத்திறனாளி தம்பதி சப்-கலெக்டரிடம் மனு

கோபி, கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் சிவசண்முகம், 39, இவரது மனைவி நித்யா, 33; இருவரும் மாற்றுத்திறனாளிகள். மனைவியுடன் சேர்ந்து சிவசண்முகம், கோபி சப்-கலெக்டர் சிவானந்தத்திடம், நேற்று மனு வழங்கினார். மனு விபரம்:
இரு ஆண்டுக்கு முன் கனரா வங்கியில் கடன் பெற்று, பேட்டரியால் இயங்கும் பயணியர் ஆட்டோ வாங்கினேன். கொடிவேரி அணை பஸ் ஸ்டாப்பில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்கிறேன். அப்பகுதியை சேர்ந்த சிலர், பயணிகளை ஏற்றிச்செல்ல கூடாது என மிரட்டுகின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறேன். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். சப்-கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Advertisement