மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி; கமிஷனர்களுக்கு அரசு உத்தரவு

பொள்ளாச்சி: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தரவிட்டுஉள்ளது.
மாற்றுத்திறனாளிகள், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சியில் பதவிகளை பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, தற்போது, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், தலா ஒரு தகுதியான மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூதன், அனைத்து மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு:
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016ல் குறிப்பிடப்பட்ட '40 சதவீதம் மாற்றுத்திறன் கொண்டவர்' என்ற சான்றிதழ் பெற்றுள்ள நபர்கள், இந்த நியமனத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகள், மாநகராட்சி அல்லது நகராட்சி பகுதியில் வசிப்பவராக இருப்பதுடன், அந்தந்த பகுதி வாக்காளர் பட்டியலிலும் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இரண்டு தினசரி நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடும் நாளில் இருந்து, 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
கமிஷனர், விண்ணப்பங்களை பெறும் அலுவலராக இருப்பார். பெறப்பட்ட விண்ணப்பங்களை கூர்ந்தாய்வு செய்ய, கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
அக்குழு, பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, ஒவ்வொரு மாநகராட்சி மற்றும்
நகராட்சிக்கு தலா ஒரு தகுதியான நபரை பரிந்துரை செய்து, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நியமன கவுன்சிலர்களாக பதவி வகிக்க பரிந்துரைக்கப்படும்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை, https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியில், இன்று முதல் 17ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தகுதியான விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனரிடம், ஜூலை 17ம் தேதி மாலை 3:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு
-
மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்
-
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
-
சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'
-
திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
-
பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் முன்மாதிரி: மத்திய அமைச்சர் புகழாரம்