சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி : சட்டம், ஒழுங்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி., ரஜத்சதுர்வேதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்பான பொது மற்றும் குடிநீர், பட்டா தொடர்பான பிரச்னைகள், ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்டவையால் ஏற்பட வாய்ப்புள்ள பிரச்னைகளுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும், பிரச்னைகளை சுமூகமாக தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வரும் காலங்களில் சட்டம், ஒழுங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே கண்டறிந்து உரிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார் சிங், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

Advertisement