அரசு கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்கள் வகுப்பு துவக்க விழா

விழுப்புரம் : விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.

முதல்வர் சிவக்குமார் வரவேற்று பேசியதாவது; கல்லுாரியில் இக்கல்வியாண்டு சேர்க்கையை பெற 70 ஆயிரத்து 50 விண்ணப்பங்கள் வந்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் இரு கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்கல்லுாரி, இந்தியாவில் உள்ள 46 ஆயிரம் கல்லுாரிகளில் 201வது இடத்தை பெற்றுள்ளது.

இங்குள்ள பேராசிரியர்கள் உங்களுக்கு சிறப்பான பாடங்களை கற்பிப்பதோடு, ஒழுக்கத்தையும் சேர்த்து கற்றுத்தருவர். இக்கல்லுாரியில் பயிலும் நீங்கள், படிப்பு முடித்து வெளியே செல்லும் போது நல்ல பணிகளில் சேர்ந்து பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என கூறினார். துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement