வள்ளலார் மன்றத்தில் ஆனி மாத பூச விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில், ஆனி மாத பூச விழா நடந்தது.

மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், அரிமா மாவட்ட செயலாளர் வேலு, வரதராஜன், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் முன்னிலை வகித்தனர். மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.

தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் வேலு, செயலாளர் சக்திவேல், வாசவி கிளப் தலைவர் பாலாஜி, மருந்தாளுனர் பழனியாப்பிள்ளை, மோட்டார் வாகன சங்க செயலாளர் விஜயகுமார் பங்கேற்றனர்.

ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, ஆசிரியர் இளையாப்பிள்ளை ஆகியோர் அகவல் படித்து பிரார்த்தனை செய்தனர்.

தொடர்ந்து, பால்கன்-7 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த இந்தியாவின் முதல் வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அவருடன் சென்ற குழுவினர் பயணம் வெற்றிகரமாக அமைய சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.

Advertisement