60 ஆண்டுகளில் இல்லாத வெயிலால் மக்கள் அவதி

எல் கிரனாடோ: -தெற்கு ஐரோப்பிய நாடுகள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்ப அலையின் பிடியில் சிக்கி உள்ளன. ஸ்பெயினில், கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை பதிவானது.

பருவநிலை மாற்றம், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், ஐரோப்பிய நாடுகளை தற்போது வெப்ப அலை வாட்டி வதைத்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஸ்பெயின்.



ஸ்பெயினில் உள்ள எல் கிரனாடோ நகரில், 46 டிகிரி செல்ஷியஸ் வெயில் நேற்று பதிவானது. இது ஜூன் மாதத்தில் நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். கடந்த, 1965ல் செவில்லே நகரில், 45.2 டிகிரி பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. போர்ச்சுக்கலில் வெப்பநிலை 43 டிகிரியை எட்டியது.

Advertisement