ஆபாச பேச்சு  இருவர் கைது

அரியாங்குப்பம் : மது போதையில் ஆபாசமாக பேசிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தவளக்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் தானாம்பாளையம் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பள்ளி விளையாட்டு மைதானம் அருகே மது போதையில், அவ்வழியாக சென்றவர்களை ஆபாசமாக பேசிய இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், கொருக்குமேடு பகுதியை சேர்ந்த, ஜான்பால், 28, புதுச்சேரியை சேர்ந்த பிரதீப், 29, என்பது தெரியவந்தது. இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Advertisement