புதுச்சேரி பா.ஜ., தலைவராக ராமலிங்கம் பதவியேற்பு

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ராமலிங்கம், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக் முன்னிலையில் மாநில தலைவராக நேற்று பொறுப்பேற்றார்.

பா.ஜ., தலைமை அறிவுறுத்தலின்பேரில் கட்சி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநில தேர்தல் அதிகாரி அகிலனிடம், புதுச்சேரி பா.ஜ., தலைவர் தேர்தலுக்காக மனு தாக்கல் செய்தார்.

வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், ராமலிங்கம் போட்டின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் பதவியேற்பு விழா புதுச்சேரியில் நேற்று நடந்தது.

பா.ஜ.,மாநில தேர்தல் அதிகாரி அகிலன், மாநில தலைவராக ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பை வெளியிட்டார். பின், முன்னாள் தலைவர் செல்வகணபதி கட்சி நிர்வாக பொறுப்புகளை ராமலிங்கத்திடம் வழங்க, அவர் பா.ஜ., தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.

Advertisement