ஓய்வூதிய குறைகேட்பு முகாம்

கள்ளக்குறிச்சி : முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு ஓய்வூதிய குறைகேட்பு முகாம் வரும் 4 மற்றும் 5ம் தேதி திருக்கோவிலுாரில் நடக்கிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை ஒருங்கிணைத்து திருக்கோவிலுார் பஸ் நிலையம் எதிரே உள்ள ஆர்சி சர்ச்சில் வரும் 4 மற்றும் 5 ம் தேதி நடமாடும் வாகனம் மூலம் குறைகேட்பு முகாம் நடக்கிறது.

குறைகள் இருப்பின் ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, பேன் கார்டு ஆகிய ஆணவங்களுடன் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement