உழவு மாடு தட்டுப்பாடு எதிரொலி; இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி

விருத்தாசலம், : விருத்தாசலம் பகுதியில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த எருமனுார், மணலுார், எ.வடக்குப்பம், சின்னவடவாடி, பெரியவடவாடி, தொட்டிக்குப்பம், கோ.பவழங்குடி உள்ளிட்ட பல்வேறு 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆண்டுதோறும் ஆடி பட்டத்தில் போர்வெல், கிணறு பாசனம் மற்றும் மானாவாரியாக வேர்க்கடலை சாகுபடி செய்வது வழக்கம்.
அதேபோல், நடப்பாண்டு விருத்தாசலம் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, விருத்தாசலம் பகுதியில் விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதில் தற்போது, உழவு மாடுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இயந்திரம் மூலம் வேர்க்கடலை சாகுபடி செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, எ.வடக்குப்பம் விவசாயி செல்வக்குமார் கூறுகையில், உழவு மாடுகள் மூலம் வேர்க்கடலை விதைப்பு செய்ய, மாடு தட்டுப்பாடு உள்ளது. இதனால், ஏர் மாடுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. உழவுப் பணிகளை மேற்கொள்ள 3 பேர், விதை பருப்பு போட 9 பேர் என, ஒரு ஏக்கருக்கு, 12 பணியாட்கள் தேவை. இயந்திரத்தை பயன்படுத்தி விதைப்பதால், ஒரே ஒரு பணியாளர் போதுமானதாக உள்ளது.
இயந்திரத்தில் விதைத்தால், சீரான இடைவெளியில் வேர்க்கடலை பயிர் வளரும். அதனால், போதிய வெளிச்சம் கிடைத்து பயிர்கள் நன்கு வளரும். களை எடுக்கும் பணிகளும் எளிதாக இருக்கும்' என்றார்.
மேலும்
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தேவை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ஜூலையில் வெப்பம் அதிகமாக இருக்கும்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு; ஒரு சவரன் ரூ.72,160!
-
'மாநகராட்சி வரி முறைகேடு தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழல்'
-
மாஜி அமைச்சர் சொத்து குவிப்பு வழக்கு; 5 முறை கோர்ட் மாற்றம்