பொதுப்பணித்துறை அதிகாரியுடன் உப்பளம் எம்.எல்.ஏ., ஆலோசனை 

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஸ்ரீனிவாசனை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அம்பேத்கர் சாலையில் உள்ள செயின்ட் மத்தியாஸ் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள 'யு'வடிவ வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்புகளை உடனடியாக துார்வார வேண்டும். காந்தி வீதி, சுப்பையா சாலை, ஆம்பூர் சாலை, பாரதி மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 'யு' வடிவ வாய்க்கால்கள் மற்றும் துறைமுக இணைப்பு சாலையின் நேதாஜி நகர் பின்புறம் பாதி விடுபட்ட சாலை அமைக்கும் பணி விரைந்து முடிக்க வேண்டும். அப்துல் கலாம் குடியிருப்பு பகுதியில் 4 குடியிருப்புகள் அமைக்கும் பணியினை விரைவில் துவங்க வேண்டும்.

பெரியபள்ளி வீரர் வெள்ளி பகுதி, வ.உ.சி வீதி, மோரிசன் வீதி, அப்பாவு மேஸ்திரி வீதி, பாண்டியன் சந்து, லத்திப் சந்து, பொண்ணிய குட்டி வீதி, சந்தா சாகிப் வீதி, நைநியப்பா வீதி ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை அமைக்க வேண்டும். மேலும், வாணரப்பேட்டை பகுதியில் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் நிறைவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று, வாய்க்கால் துார்வாரும் பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும். மற்ற பணிகள் அனைத்தும் விரைவில் துவங்கப்படும் என உறுதியளித்தனர். இதில், தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், ராகேஷ் உடனிருந்தனர்.

Advertisement