கூலி  தொழிலாளி தற்கொலை 

திருக்கனுார் : லிங்காரெட்டிப்பாளையம், தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ், 54; கூலி தொழிலாளி. இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய கனகராஜ், அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர், கண்டித்தனர்.

நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு அதிக போதையில் வீட்டிற்கு வந்த கனகராஜை அவரது மனைவி மற்றும் மகன் சிவக்குமார் கண்டித்தனர். இதில் மனமுடைந்த கனகராஜ் வீட்டில் எதிரே உள்ள கொட்டகையின் உள்ளே சென்று கதவை முடிக்கொண்டுள்ளார். இதையடுத்து, இரவு 7:00 மணிக்கு அவரது மகன் சிவக்குமார் கோட்டகைக்கு சென்று பார்த்தபோது, கனகராஜ் துாக்கிட்டு கொண்டார்.

உடன் உறவினர்கள் உதவியுடன் கனகராஜை மீட்டு, வானுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, பரிசோதனை செய்தபோது கனகராஜ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement