தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் அமைய வேண்டும்; அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு

புதுச்சேரி : பா.ஜ., மாநில புதிய தலைவராக ராமலிங்கம் பதவியேற்பு விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:

புதுச்சேரி மாநில பா.ஜ.,வில் கடந்த 2, 3 நாட்களாக பரபரப்பான கட்டங்கள் அரங்கேறியது. அதன் கிளைமேக்ஸ்காக புதிய மாநில தலைவராக போட்டியின்றி ராமலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.,விற்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஒரே ஒரு எம்.எல்.ஏ.,வை கொண்ட பா.ஜ., இன்றைக்கு 6 எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக உயர்ந்துள்ளதற்கு , ஒவ்வொரு தொண்டனுக்கு பங்கு உள்ளது.

ராஜினாமா செய்துவிட்டு சென்ற 4 பேரும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வரமாட்டார்கள் என பலர் நினைத்தனர். ஆனால், மறுநாளே சரியான நேரத்தில் தலைமை அலுவலகத்திற்கு வந்து, நாங்கள் என்ன கட்சி பணி செய்ய வேண்டும் என கேட்ட பெருமை நமது தலைவர்களையே சாரும்.

தலைமை எந்த நம்பிக்கையோடு எங்களுக்கு பொறுப்பு மற்றும் வேலையை கொடுத்து இருக்கிறாதோ, அந்த வேலையை சரியாக செய்து, கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பாடுபடுவோம்.

எதிர்காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் புதுச்சேரியில் அமைய வேண்டும். பிரதமர் மோடி கனவை நிறைவேற்றும் வகையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பாடுபட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசை வலுப்படுத்துவதோடு, பா.ஜ., கட்சி புதுச்சேரியில் தவிர்க்க முடியாத கட்சி என்பதை நிரூபிக்க வேண்டும். என்றார்.

Advertisement