திண்டிவனத்திற்கு மாஜி முதல்வர் வருகை வரவேற்பு குறித்து அ.தி.மு.க., ஆலோசனை

திண்டிவனம் : அ.தி.மு.க.,பொது செயலாளர் பழனிசாமி திண்டிவனம் வருகை தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அ.தி.மு.க.,பொது செயலாளர் பழனிசாமி வரும் 10ம் தேதி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனத்தில், 'மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, திண்டிவனத்திலுள்ள பயணியர் விடுதில் சட்டசபை தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அர்ஜூனன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார். நகர அ.தி.மு.க., செயலாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தார். மாநில ஜெ.,பேரவை துணை செயலாளர் பாலசுந்தம், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை தலைவர் ஏழுமலை, மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் விஜயகுமார், ஐ.டி.பிரிவு காமேஷ், சவுகத்அலி, இளைஞரணி உதயகுமார், பாசறை நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், கார்த்திக், மாவட்ட பிரதிநிதி முருகன், முன்னாள் கவுன்சிலர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், திண்டிவனத்திற்கு வருகை தரும் அ.தி.மு.க., பொது செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும்
-
விசாரணைக்கைதி உயிரிழந்த விவகாரம்; சிவகங்கை எஸ்.பி., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
-
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: 4.96 கோடி பேர் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தேவை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ஜூலையில் வெப்பம் அதிகமாக இருக்கும்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு