முன்னாள் நீதிபதி தோட்டத்தில் திருடிய மூன்று பேருக்கு 'காப்பு'

திருவாலங்காடு:முன்னாள் நீதிபதி தோட்டத்தில் திருடிய மூவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரத்தில் அமைந்துள்ள முன்னாள் நீதிபதி தினகரன் தோட்டத்திற்குள், கடந்த 15ம் தேதி புகுந்த மர்மநபர்கள், 'சீலிங் பேன்' மற்றும் டிராக்டர் பேட்டரிகளை திருடி சென்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார் திருடர்களை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு பூண்டி ஒன்றியம் தோமூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், 31, ராமஞ்சேரியைச் சேர்ந்த கமலக்கண்ணன், 26, மற்றும் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த சுரேஷ், 29, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து திருட்டுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம், 'சீலிங் பேன்' பேட்டரி, கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

Advertisement