ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி

5

புதுடில்லி: கடந்த ஜூன் மாதம் ஜிஎஸ்டி மூலம் 1,84,597 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வசூல் ஆன ரூ. 1,73,813 கோடியை காட்டிலும் தற்போது கூடுதலாக 6.2 சதவீதம் அதிகம் ஆகும்.


கடந்த ஜூன் மாதம் வசூலான ரூ.1,73,813 கோடியில்

மத்திய ஜிஎஸ்டி -34,558 கோடி ரூபாய்

மாநில ஜிஎஸ்டி - 43,268 கோடி ரூபாய்

ஐஜிஎஸ்டி - 93,280 கோடி ரூபாய்

செஸ்- 13,491 கோடி ரூபாய் அடங்கும்.

ஜூன் மாத வசூலில் உள்நாட்டு வர்த்தகம் மூலம் கிடைக்கும் வருமானம் 4.6 சதவீதம் உயர்ந்து ரூ.1.38 லட்சம் கோடியாகவும், இறக்குமதியில் இருந்து வந்த ஜிஎஸ்டி வசூல் 11.4 சதவீதம் உயர்ந்து ரூ.46,690 கோடியாகவும் உள்ளது.


அதே நேரத்தில் கடந்த மே மாதம் வசூலான ரூ.2.01 லட்சம் கோடி, ஏப்ரல் மாதம் வசூலான ரூ.2.37 லட்சம் கோடியை விட ஜூன் மாத வசூல் குறைந்துள்ளது.

மாநில வாரியாக



மஹாராஷ்டிராவில் - 30,553 கோடி ரூபாய்

கர்நாடகா - 13,409 கோடி ரூபாய்

குஜராத்- 11,040 கோடி ரூபாய்

தமிழகம் -10, 676 கோடி ரூபாய்

ஹரியானா - 9,959 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.


ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது ஜிஎஸ்டி வசூல் இரு மடங்காகி உள்ளது. 2025 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement