தேர்தல் வருவதால் சி.பி.ஐ., விசாரணை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: ''திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்ட வழக்கை தமிழக அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உள்ளது.
இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்புவனம் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கை வரவிருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உள்ளது.
அதை வரவேற்கும் நேரத்தில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிக்காக காத்திருந்த போது, தி.மு.க., நிர்வாகியான ஞானசேகரனுடன் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிப்பதில் இதே அவசரமும் அர்ப்பணிப்பும் ஏன் காட்டப்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.
@twitter@https://x.com/annamalai_k/status/1940064565963972713
twitter
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் வழக்கு விசாரணையை கடந்த ஆண்டு சி.பி.ஐ., விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் மாற்றியதை எதிர்த்து இதே தி.மு.க., அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.தற்போது என்ன மாறிவிட்டது. தேர்தல் நெருங்குவதால், பாரபட்சமற்ற விசாரணை என்ற எண்ணம் தி.மு.க..,வுக்கு தோன்றுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.



மேலும்
-
ஆமை வேகத்தில் அ.தி.மு.க., - ஐ.டி., அணி; கட்டமைப்பை மாற்றியமைக்க போர்க்கொடி
-
மணமான 4வது நாளில் உயிரை மாய்த்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் மகள் இறந்ததாக குற்றச்சாட்டு
-
முன்னாள் நீதிபதி தோட்டத்தில் திருடிய மூன்று பேருக்கு 'காப்பு'
-
தொழுதாவூர் ரயில்வே கேட் மூடல் 300 ஏக்கர் விவசாயம் பாதிப்பு சுரங்கப்பாதை விரைந்து அமைக்கப்படுமா?
-
அரசு நிலத்தை 'ஆட்டை' போட திட்டம் ஊராட்சி நிர்வாகம், மகளிர் குழு புகார்
-
மூணாறில் ஜீப் கவிழ்ந்து ஊரப்பாக்கம் பயணி பலி