விளாசல் ஆட்டம் தொடரும் * ஹாரி புரூக் உறுதி

பர்மிங்ஹாம்: லீட்ஸ் டெஸ்டில் 99 ரன்னில் சதத்தை நழுவவிட்டார் இங்கிலாந்தின் ஹாரி புரூக். இன்று துவங்கும் பர்மிங்ஹாம் டெஸ்டிலும் அசத்தலாம். இப்போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் சானல்களில் தமிழ் வர்ணனையிலும் காணலாம். ஹாரி அளித்த பேட்டி:
இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கேப்டன் சுப்மன் கில், ரிஷாப் பன்ட் என இருவரும் சவாலானவர்கள். தவிர முதல் டெஸ்டில் 5 சதம் அடிக்கப்பட்டது. எங்களைப் பொறுத்தவரையில் 'மிடில்', 'டெயிலெண்டர்களை' விரைவில் வீழ்த்தியது, வெற்றிக்கு வித்திட்டது.
முதல் டெஸ்டில் இந்தியா 835 ரன் குவித்துள்ளது. இதனால் பவுலிங்கிற்கு கைகொடுக்கும் வகையில் ஆடுகளம் வேண்டும் என ஏற்கனவே கேட்டுள்ளோம். ஆனால் வானிலையை பார்க்கும் போது, மீண்டும் பேட்டிங்கிற்கு உதவும் எனத் தெரிகிறது.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் என அனைவரும் சரியான அளவில் பந்துவீசினர். எனினும் தொடர்ந்து ஒரே இடத்தில் பந்தை 'பிட்ச்' செய்து வீசுவது என்பது அவ்வளவு எளிதல்ல. இதில் லேசாக தவறு நடந்தாலும், எங்கள் 'ஸ்டைலில்' ஆதிக்கம் செலுத்தி விடுவோம்.
இந்திய அணி வலிமையானது. இங்கு அவர்களுக்கு அதிக ஆதரவு உள்ளது. சற்று நீண்ட இத்தொடரில் மீண்டு வர முயற்சிக்கலாம். ஒவ்வொரு போட்டியிலும் விளாசல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெற முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
பட்டாலியன் போலீஸ்காரர் மர்ம சாவு; செஞ்சி போலீசார் தீவிர விசாரணை
-
நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவர் கைது
-
லாரி தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு
-
திருடுபோனது 8 சவரன்: வழக்கு போட்டது 3 சவரன்; கலெக்டரிடம் பெண் புகாரால் பரபரப்பு
-
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஏட்டு 'சஸ்பெண்ட்'
-
சிறுமியை கண்டுபிடிக்க லஞ்சம்; எஸ்.ஐ., தம்பதி மீது வழக்குப் பதிவு