திருடுபோனது 8 சவரன்: வழக்கு போட்டது 3 சவரன்; கலெக்டரிடம் பெண் புகாரால் பரபரப்பு

கடலுார்; குமராட்சியில் 8 சவரன் நகை திருடு போன நிலையில், போலீசார் 3 சவரன் மட்டுமே திருடு போனதாக வழக்கு போட்டுள்ளதாக கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு அளித்தார்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில், தெம்மூர் மெயின்ரோட்டை சேர்ந்த சேகர் மனைவி சுந்தரி, 45; அளித்த மனு:
கடந்த மே மாதம் நான் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த எங்கள் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 35; என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி என்னிடமிருந்து 5 சவரன் தாலிச்செயின், 3 சவரன் வளையல் உள்ளிட்ட 8 சவரன் நகையை பறித்துச் சென்றார்.
புகாரின் பேரில், குமராட்சி போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். ஆனால் போலீசார் 3 சவரன் மட்டுமே திருடுபோனதாகவும், அதை மட்டுமே கண்டுபிடித்து தருவோம் என கூறுகின்றனர்.
முறையாக வழக்குப்பதிந்து 8 சவரன் நகையை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மாணவன் மீது போலீஸ் தாக்குதலா... விசாரணை...: நெல்லையில் பரபரபரப்பு
-
ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
-
இந்திய வம்சாவளி பெண் கொலை : பிரிட்டனில் 23 வயது வாலிபர் கைது
-
சாட் ஜிபிடியை நம்பக்கூடாது': உருவாக்கியவரே சொல்கிறார்
-
மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!