தொடர் மழை எதிரொலியாக மஞ்சள் வரத்து சரிவு: ஏலம் ரத்து
ராசிபுரம், தொடர் மழை எதிரொலியாக மஞ்சள் வரத்து குறைந்தது. இதனால் நேற்று நடக்க இருந்த ஏலம் ரத்து செய்யப்பட்டது.
நாமகிரிப்பேட்டை, ஆர்.சி.எம்.எஸ்.,ல் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகள், ஆர்.சி.எம்.எஸ்., மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை குறைந்தபட்சம், ரூ.50 லட்சம் வரை விற்பனையாகும்.
மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முன், விவசாயிகள் மஞ்சளை அறுவடை செய்து, வேகவைத்து, காய வைத்து, ஜலித்து எடுத்து வருவர்.
ஆனால், கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இத னால், மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வர, விவசாயிகளால் தயார் செய்ய முடியவில்லை. இதையடுத்து நேற்று ஆர்.சி.எம்.எஸ்.,க்கு குறைந்த அளவே மஞ்சள் மூட்டைகள் வரத்தாகின. இதையடுத்து, நேற்று நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த வாரம் செவ்வாய் கிழமை வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடக்கும் என, ஆர்.சி.எம்.எஸ்., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது என்ன நியாயம்? முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
பா.ம.க.,வில் இருந்து எம்.எல்.ஏ., அருள் நீக்கம்; அன்புமணி அறிவிப்பு
-
அஜித்குமார் மரணம் எதிரொலி; தமிழகம் முழுவதும் போலீஸ் தனிப்படைகள் ஒட்டுமொத்தமாக கலைப்பு
-
அனைத்து கழிவுநீர் டேங்கர் லாரிகளிலும் 3 மாதங்களுக்குள் ஜி.பி.எஸ்., கருவி: கோவை மாநகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவு
-
வடகிழக்கு மின் கழகத்திடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம்
-
மாமரத்திலிருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி