புதுச்சேரி யூனியன் பிரதேச உதயநாள் விழா

புதுச்சேரி : சொசியெத்தே புரோகிரேசீஸ்த் உயர்நிலைப் பள்ளியில் புதுச்சேரி யூனியன் பிரதேச உதயநாள் விழா நேற்று நடந்தது.

புதுச்சேரி சட்டமன்றங்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவை வழங்கும் யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அமலுக்கு வந்தது. அதனை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி புதுச்சேரியின் உதயநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 62வது புதுச்சேரி யூனியன் பிரதேச உதயநாள் விழா, சொசியெத்தே புரோகிரேசீஸ்த் உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.

பள்ளியின் தாளாளர் வேதானந்தம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் திருமலைவாசன் வரவேற்றார். பேராசிரியர் ராஜன், வரலாற்று ஆய்வாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு, வரலாற்றுச் சான்றுகளுடன் புதுச்சேரி உதயநாள் குறித்து சிறப்புரை வழங்கினர்.

பள்ளியின் ஆய்வாளர் ராஜேந்திரன், மொழியியல் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் சம்பத், ஸ்கை யோகா பேராசிரியர் கிருஷ்ணசாமி, பைந்தமிழ் பாவலர் இளமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் பாஸ்கரன், பொறியாளர் செல்வம், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமுதாய நலப்பணித்திட்ட அலுவலர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

Advertisement