உயர் மின் கோபுர விளக்கு பணிகள் தீவிரம்

மயிலம் : மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதிய உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சங்கராபரணி ஆறுப்பாலம் உள்ளது. இந்த பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இதுவரையில் இந்த பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் மிக இருட்டாக இருந்தது.

இப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையோரத்தில், உயர் மின் கோபுர விளக்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் இப்பகுதியில் விபத்து அபாயம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement