அரசுப் பள்ளிகளில் தரமில்லா உணவு

காரைக்கால் :காரைக்காலில் அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு தரம் இல்லாமல் வழங்கப்படுவதாக சமூக வலைதளத்தில் வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கல்வித்துறை சார்பில் நெடுங்காடு, திருப்பட்டினம்,கோட்டுச்சேரி, திருநள்ளாறு மற்றும் நகர் பகுதிகளில் சுமார் 100க்கு மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். மதியவேளையில் மாணவர்களுக்கு தயிர், புளி மற்றும் சாம்பார் சாதம். அரிசி உப்புமா உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது கல்வித்துறை மூலம் வழங்கப்படும் மதிய உணவு தரம் இல்லாமல் பள்ளி மாணவர்கள் சரியான முறையில் சாப்பிடாமல் உணவை குப்பையில் வீசும் அவல நிலை நீடித்து வருகிறது.
இதை நம்பி பள்ளிக்கு வரும் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து கல்வித்துறை அதிகாரியிடம் பெற்றோர்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. . எனவே புதுச்சேரி அரசு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமுடன் வழங்க வேண்டும். இதற்கான ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கூறிவந்த நிலையில் தற்போது பள்ளிகளில் தரமில்லாமல் வழங்கப்படும் உணவுகள் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்
-
ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!
-
அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு
-
அதிக கார்பன் இருப்பு நமக்கு பெருமை: சொல்கிறார் அருணாச்சல் முதல்வர்
-
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை