தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி

செஞ்சி : செஞ்சி அருகே தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க., வில் 'ஓரணியில் தமிழ்நாடு' எனும் செயலி மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதையொட்டி, மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஒன்றியத்திற்கான, ஓட்டுச்சாவடி பாக முகவர்கள், டிஜிட்டல் முகவர்களுக்கான பயிற்சிக்கூட்டம் அதே பகுதியில் நடந்தது.
தொகுதி மேற்பார்வையாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயிற்சி கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
செஞ்சி தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் குருஜி உறுப்பினர் சேர்க்கை செயலி குறித்து முகவர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட அவை தலைவர் சேகர், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர்
சிவா, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன், அமைப்புசாரா தொழிலாளர் அணி தமிழரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்
-
ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!
-
அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு
-
அதிக கார்பன் இருப்பு நமக்கு பெருமை: சொல்கிறார் அருணாச்சல் முதல்வர்
-
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை