நந்தி மலையில் இன்று நடக்கிறது சிறப்பு அமைச்சரவை கூட்டம்

பெங்களூரு: நந்தி மலையில் இன்று, சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.

பெங்களூரின் அருகில் உள்ள மாவட்டம் சிக்கபல்லாபூர். இங்கு புகழ்பெற்ற நந்தி மலை சுற்றுலா தலம் இருந்தாலும், மாவட்டம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இதனால் சாம்ராஜ்நகர், கலபுரகியில் நடத்தியது போல, சிக்கபல்லாபூரிலும் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடத்த வேண்டும் என, கோலார், சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை வைத்தனர்.

கடந்த மாதம் 19ம் தேதி நந்தி மலையில், சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து இறுதி செய்யப்படாததால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ஜூலை 2ம் தேதி சிறப்பு அமைச்சரவை கூட்டம் கண்டிப்பாக நடக்கும் என, சிக்கபல்லாபூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.சி.சுதாகர் அறிவித்திருந்தார். அதன்படி இன்று மதியம் 12:00 மணிக்கு, நந்தி மலையில் உள்ள மயூரா மண்டபத்தில் நடக்க உள்ளது.

Advertisement