'குமாரசாமி முதல்வரானால் பெண்களுக்கு ரூ.5,000'

மாண்டியா : ''காங்கிரஸ் அரசு பெண்களுக்கு, மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்குகிறது. குமாரசாமி முதல்வரானால், 5,000 ரூபாய் வழங்கப்படும்,'' என, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் கட்சியை பலப்படுத்துவதில், ம.ஜ.த., ஆர்வம் காட்டுகிறது. பல்வேறு பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறது. மாண்டியாவின் கே.ஆர்.பேட் தொகுதியிலும் உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்து, குமாரசாமி முதல்வரானால், பெண்களுக்கு வெறும் 2,000 ரூபாய் அல்ல. மாதந்தோறும் 5,000 ரூபாய் வழங்குவோம். இந்த திட்டத்தால், மாநில மேம்பாட்டுக்கு பிரச்னை ஏற்படாமல், பார்த்துக் கொள்வோம்.
இதற்கு முன்பு, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த., கூட்டணி அரசு கவிழ, சித்தராமையாவே காரணம். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ.,வுக்கு அனுப்பியது யார்? இதன் காரணகர்த்தா அவர் தான். சொந்த கட்சிக்கு துரோகம் செய்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் நிலை பரிதாபமாக உள்ளது. தங்களின் கஷ்டங்களை வீதிக்கு வந்து கூறும் அளவுக்கு வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: சென்னை ஐகோர்ட்
-
ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!
-
அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு
-
அதிக கார்பன் இருப்பு நமக்கு பெருமை: சொல்கிறார் அருணாச்சல் முதல்வர்
-
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை