சிறுவர் மன்றம் திறப்பு

விழுப்புரம் : விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவில், மேற்கு போலீசார் சார்பில் சிறுவர் மன்றம் திறப்பு விழா நடந்தது.

எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, சிறுவர் மன்றத்தை திறந்து வைத்தார். ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.

இதில், பள்ளி மாணவர்கள் மாலை நேரங்களில் பொது அறிவு வளர்க்கும் வகையிலும், அரசின் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் புத்தகம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

அப்போது, இன்ஸ்பெக்டர் கல்பனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement