சட்ட விழிப்புணர்வு முகாம்

நெட்டப்பாக்கம், :சூரமங்கலம் ஜெயதுர்கா மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நெட்டப்பாக்கம் போலீஸ் சார்பில் நடந்த முகாமிற்கு, பள்ளி நிர்வாகி விஜயாமணி தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை விஷ்னுபிரியா வரவேற்றார். நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரா கலந்து கொண்டு புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். அதில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் அதனை கையாளும் முறைகள் குறித்தும், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளும் அதனை தடுக்கு வழிமுறைகள் குறித்து, பெண் பிள்ளைகள் கையாளும் சமூக பிரச்னைகள் குறித்து விளக்கினார்.முகாமில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரஞ்சித் நன்றி கூறினார்.

Advertisement