நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி : இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில், அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

புதுச்சேரி, குயவர்பாளையம் லெனின் வீதி (மணிமேகலை பள்ளி எதிரில்) இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 45 வயதுள்ள பெண்களுக்கு அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நுாறு சதவீதம் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

14 நாட்கள் முழுநேர பயிற்சி, 90 சதவீத செய்முறை பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பயிற்சி காலங்களில், உணவுகள் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க 4ம் தேதி கடைசி நாளாகும். வரும் 7ம் தேதி பயிற்சி துவங்குகிறது. விண்ணப்பிக்கும் போது, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வரவும். மேலும், 8870497520, 0413 2246500 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.

Advertisement