சனி, ஞாயிறு நாட்களில் நகரை சுற்றிவர உள்ளாட்சி அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி

சின்னமனூர் : உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அதிகாரிகள் வார விடுமுறை சனி,ஞாயிறு நாட்களில் ஊருக்கு செல்ல கூடாது என்றும், நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் என உள்ளாட்சி உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பேரூராட்சி, நகராட்சிகளில் பணியாற்றும் செயல் அலுவலர்கள், கமிஷனர்கள், பொறியாளர்கள், குடிநீர் பிரிவு அலுவலர்கள் வார விடுமுறை நாட்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு போவதை தவிர்க்க வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் தங்கள் பணிபுரியும் ஊர்களில் பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் பகுதிகளை ஆய்வு செய்யவும், சாக்கடைகளை சுத்தமாக பராமரிக்கவும், குடிநீர் வினியோகத்தில் எந்தவித பிரச்னையும் வராமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே இந்த வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் வாரம் ஒரு முறையாவது வீட்டிற்கு சென்று குடும்பத்தை பார்க்காமல் எப்படி இருப்பது என அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

Advertisement