மேகமலை ரோட்டில் வாகன விபத்தை தடுக்க ' கிராஸ் பேரியர்' அமைக்கப்படுமா

கம்பம் : மேகமலை ரோட்டில் வாகன விபத்துக்களை தடுக்க 'ரோலர் கிராஸ் பேரியர்' அமைக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் மலைப் பாதைகளில் போடிமெட்டு, மேகமலை ரோடுகள் உள்ளன. இந்த மலைப் பாதைகளில் போக்குவரத்து அதிகம் உள்ளது. மலைப் பாதையில் வாகன விபத்துக்களை தவிர்க்க ரோலர் கிராஸ் பேரியர் அமைக்கப்படுகிறது. கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும் போது, வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழும் முன், இந்த ரோலர் கிராஸ் பேரியரில் படும்போது, வாகனம் பின்னோக்கி தள்ளப்பட்டு விபத்து தவிர்க்கப்படும். தடுப்பு கம்பிகள் சேதமடையும். வாகனங்கள் பள்ளத்திற்குள் விழ வாய்ப்புள்ளது. ஆனால் ரோலர் கிராஸ் பேரியரில் வாகனம் மோதும் போது, வாகனம் முன்னோக்கி தள்ளப்படும். விபத்து வாய்ப்பு 100 சதவீதம் தடுக்கப்படும். கொடைக்கானல் ரோட்டில் இது அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கம்பமெட்டு ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் மேகமலை மலை ரோட்டில் ஆபத்தான கேர்பின் வளைவுகள் அதிகம் உள்ளன. எனவே மேகமலை ரோட்டில் ரோலர் கிராஸ் பேரியர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முன்வர சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement