தெருக்களின் நடுவில் உள்ள மின்கம்பங்களால் அவஸ்தை; ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் சிரமம்

மாவட்டத்தில் நகராட்சிகள், ஊராட்சிகளில் புறநகர் பகுதிகள் உருவாகிக்கொண்டே செல்கிறது. இவற்றிற்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய தேவையான தெரு விளக்குகள் புறநகர் பகுதிகளுக்கு அவசியமாக உள்ளது.
இதனால் வீடு கட்டுபவர்களும் ஏற்கனவே வீடு கட்டி இருப்பவர்களுக்கும் தெரு விளக்குகள் வேண்டி தினமும் உள்ளாட்சி அமைப்புகளில் மனு கொடுத்து வருகின்றனர்.
நிதி நிலைமைக்கு ஏற்ப தெரு விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
தேவைப்படும் தெருக்களுக்கு மின்வாரியம் மூலம் மின் கம்பங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால் மின் கம்பங்கள் அமைக்கும் முன்பு ரோடுகள், தெருக்களின் ஓரங்களை கணக்கிட்டு அமைப்பது இல்லை. காலியாக இருக்கும் பகுதிகளில் தெருக்களின் ஓரங்களில் மின்கம்பங்களை அமைத்து விடுகின்றனர்.
நாளடைவில் அந்த பகுதியில் வீடுகள் கட்டி முழுமை அடைந்த பிறகு மின்கம்பங்களால் இடைஞ்சல் ஏற்படுகிறது.
நகராட்சிகளும் ஊராட்சிகளும் மின்கம்பங்கள் அமைக்கும் போது அதற்கான இடத்தை தேர்வு செய்து மின்வாரியத்திற்கு தருவது இல்லை. மின்வாரியத்தினரும் கிடைத்த இடத்தில் மின்கம்பங்களை அமைப்பதால் இதுபோன்ற இடைஞ்சல் ஏற்படுகிறது.
அருப்புக்கோட்டை நேதாஜி நகர் விரிவாக்க பகுதியில் ரோட்டின் நடுவில் உயர் அழுத்த மின் டவர் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைத்து விட்டனர்.
தற்போது இந்தப் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பாதையில் மின் டவர் இருப்பதால் காலியான பிளாட்டுகளின் வழியாக மக்கள் வந்து செல்கின்றனர்.
வீடுகள் முழுமையாக கட்டி முடித்த பிறகு பாதை இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எதிர்புறம் 30 அடி வீதியின் நடுவில் 15 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வரிசையாக நடப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் கனரக வாகனங்கள், வந்து செல்ல முடியவில்லை.
அவ்வாறு வாகனங்கள் வந்து சென்றாலும் மின் கம்பங்களை உரசி செல்வதால் கம்பங்கள் பல சேதமடைந்துள்ளன. நெசவாளர் காலனியில் பல தெருக்களில் நடுவில் மின் கம்பங்கள் இருப்பதால் வாகனங்கள் ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாமல் சிரமப்பட வேண்டி உள்ளது.
மின்வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால் தெருக்களின் நடுவில் மின் கம்பங்களை அமைத்து பல்வேறு இடைஞ்சல்களை ஏற்படுத்தி விட்டனர். இவற்றை அகற்றி ஓரமாக அமைக்க வேண்டும் என்றால் லட்சக்கணக்கான நிதி செலவழிக்க வேண்டி உள்ளது.
இனி வரும் காலங்களிலாவது மின்வாரியமும் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து தங்களுக்கு கட்டுப்பட்ட பகுதியில் ரோடுகள் தெருக்கள் ஓரங்களின் மின் கம்பங்களை நட, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
மேலும்
-
சாட் ஜிபிடியை நம்பக்கூடாது': உருவாக்கியவரே சொல்கிறார்
-
மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!
-
புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா
-
தொடர் தோல்வி எதிரொலி:இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் பதவி விலகல்
-
துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"