ரத்த தான முகாம்

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருவாய் துறை சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

முகாமிற்கு தாசில்தார் விஜயன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் சம்பத்குமார், மண்டல துணை தாசில்தார் பாண்டியன் முன்னிலை வகித்தனர். 31 பேர் ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் முகிலன், வரதராஜன், நிமிலன், சுகாதார மேற்பார்வையாளர் வைத்தியநாதன், சுகாதார ஆய்வாளர்கள் பாசில், அறிவழகன், சுகாதார பணியாளர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சுகன்யா, ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறினார்.

Advertisement