வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க 50 சதவீதம் மானியம்
ராமநாதபுரம் : சமூக நலத்துறை சார்பில் கைம்பெண்கள், ஆதரவற்றோர் கணவனால்கைவிடப்பட்டோர், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிர் ஆகியோர்வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கிட 50 சதவீதம் மானியம்வழங்கப்படுகிறது.
மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாகவலுப்படுத்தவும் அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி 2025--26 ம் நிதியாண்டில் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்டமதிப்புள்ள உலர், ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும் போது, அதன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாகரூ.5000 மானியத் தொகையாக வழக்கப்படும். கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்தில்பயன்பெற 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள்,கணவனால் கைவிடப்பட்டபெண்கள் என்பதற்கான சான்றிதழ், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து20 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஜூலை 14க்குள், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகம், கருவூலகக் கட்டடத்தில் முதல் மாடியில் உள்ள அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 04567 --230 466 என்ற அலைபேசியில் மாவட்ட சமூக நலஅலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
ஈரானின் அடுத்தகட்ட நடவடிக்கை; சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பு இடைநிறுத்தம்!
-
அதிகாரி மீது தாக்குதல் ஆதாரமற்றது: ஹிமாச்சல் அமைச்சர் மறுப்பு
-
அதிக கார்பன் இருப்பு நமக்கு பெருமை: சொல்கிறார் அருணாச்சல் முதல்வர்
-
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை
-
சுத்த விடுது சுந்தராபுரம்: போக்குவரத்து நடைமுறையில் வேண்டும் மாற்றம்