நாளை தொடங்கும் அமர்நாத் யாத்திரைக்கு தடபுடல் ஏற்பாடு; இன்று புறப்படுகிறது முதல் குழு!

ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்திரை நாளை (ஜூலை 02) தொடங்க உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. ஜம்முவில் இருந்து கடுமையான பாதுகாப்புடன் இன்று முதல் அமர்நாத் யாத்திரை குழு புறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரை நாளை (ஜூலை 3) தொடங்கி ஆகஸ்ட் 9ல் முடிகிறது. புனித யாத்திரை வருவோரின் பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு உள்ளன. பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடப்பதற்கு முன்பு அமர்நாத் யாத்திரை வருவதற்கு 2.36 லட்சம் பேர் முன் பதிவு செய்திருந்தனர்.
தாக்குதலுக்கு பிறகு முன்பதிவு எண்ணிக்கை குறைந்தது. ஆனாலும் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக புனித யாத்திரை வரும் பக்தர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாக முன்பதிவுகள் அதிகரிக்க தொடங்கியது. அமர்நாத் யாத்திரை நாளை (ஜூலை 02) தொடங்க உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
பாதுகாப்புக்காக சுமார் 600 கூடுதல் துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு,ஜம்முவிலிருந்து கடுமையான பாதுகாப்புடன் இன்று, முதல் அமர்நாத் யாத்திரை குழு புறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். பால்டால் முதல் குகைக் கோயிலுக்குச் செல்லும் பாதை வரை, இதுவரை இல்லாத வகையில், இந்தாண்டு பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. யாத்ரீகர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
மேலும்
-
சாட் ஜிபிடியை நம்பக்கூடாது': உருவாக்கியவரே சொல்கிறார்
-
மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!
-
புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா
-
தொடர் தோல்வி எதிரொலி:இந்திய கால்பந்து தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ் பதவி விலகல்
-
துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவேன் என மிரட்டி இருக்கிறார்கள்; போலீசார் குறித்து திருமாவளவன் "திடுக்"