மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை; குஜிலியம்பாறை ஒன்றியம், வடுகம்பாடி ஊராட்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வாரிசு சான்றிதழ் வழங்க நீதிமன்றம் ஆணையிட்டும், பல மாதங்களாக சான்றிதழ் வழங்காத வி.ஏ.ஓ.,வை கண்டித்து, மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குஜிலியம்பாறை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வரதராஜ் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் சக்திவேல், அழகர், ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராஜரத்தினம், ஒன்றிய செயலாளர் ஜெயபால் பங்கேற்றனர்.

Advertisement