மாணவன் மீது போலீஸ் தாக்குதலா... விசாரணை...: நெல்லையில் பரபரபரப்பு

திருநெல்வேலி: தூத்துக்குடி, ஆதிச்சநல்லூரை சேர்ந்த மாயாண்டி என்பவரை தேடி நெல்லை வந்த தனிப்படை போலீசார் அவரது மகனை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என தூத்துக்குடி எஸ்.பி., மறுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரை சேர்ந்த மாயாண்டி ஒரு வழக்கில் தேடப்படுகிறார்.இன்று அவரைத் தேடி திருநெல்வேலி வந்த தூத்துக்குடி தனிப்படை போலீசார், தனியார் பயிற்சி யில் பிளஸ்டூ பயிலும் அவரது மகன் 17 வயது சிறுவனை லத்தியாக் தாக்கி விசாரணைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாக சிறுவன் கூறினார். காயமுற்ற சிறுவன் தப்பி ஓடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மறுத்துள்ளார். சிறுவனின் தந்தை மாயாண்டி ஆதிச்சநல்லூரில் நிலப்பிரச்சனையில் தேடப்படுகிறார். இருப்பினும் தூத்துக்குடி போலீசார் திருநெல்வேலிக்கு வரவில்லை எனவும், தமது தந்தையை காப்பாற்றுவதற்காக சிறுவன் இத்தகைய செயலில் ஈடுபடலாம் எனவும் தூத்துக்குடி போலீசார் தெரிவித்துள்ளனர். எனவேசம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர போலீசார் விசாரிக்கின்றனர்.
மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின் போது, போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.




மேலும்
-
ஆசிய கால்பந்து போட்டியில் இந்தியா கோல் மழை
-
எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் சி.பி.ஐ.,க்கு மாற்றுவதா? கிருஷ்ணசாமி கண்டனம்
-
ரிதன்யா வழக்கில் கைதானவர்களுக்கு வெளியில் இருந்து வரும் சாப்பாடு
-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடராஜர் வலம் வரும் கஜ வாகனம் சேதம்
-
சங்கரன்கோவில் நகராட்சி தலைவி பதவி பறிப்பு
-
தி.மு.க., எதிர்க்கட்சியாவதே நல்லது