இந்திய வம்சாவளி பெண் கொலை : பிரிட்டனில் 23 வயது வாலிபர் கைது

4

லண்டன்: பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 23 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக லீசெஸ்டர் போலீசார் கூறியதாவது:

பிரிட்டனின் கிழக்கு நகரமான லீசெஸ்டரில் கடந்த வாரம் நிலா படேல் 56, நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை மைக்கேல் சுவேமேகா 23, என்பவன் தாக்கி உள்ளான்.
அந்த தாக்குதலின் போது தலையில் ஏற்பட்ட காயமடைந்ததை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.


மேலும் பிரேத பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட காயம் அவரது மரணத்திற்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. நிலா படேலை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மைக்கேல் சுவேமேகா காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மைக்கேல் சுவேமேகா இன்று லவ்பரோவில் உள்ள லீசெஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் ஆபத்தான வாகனம் ஓட்டுதல், தடைசெய்யப்பட்ட மருந்துகளை வைத்திருந்தது, போலீஸ் அதிகாரி மீது தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

நிலா படேலின் மகன் ஜெய்டன் மற்றும் மகள் டானிகா கூறுகையில்,

நாங்கள் மனம் உடைந்துவிட்டோம், எங்கள் தாயார் உண்மையிலேயே யார் என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றனர்.

Advertisement