ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

சென்னை: போலீஸ் விசாரணையில் அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
@block_Y@
அஜித் குமார் நகையை திருடியிருக்கிறானா என்று இதுவரை யாருக்கும் தெரியாது. ஆனால் அவனை அடித்து கொன்று இருக்கிறார்கள். இப்படிதான் தமிழக காவல்துறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இவரும் (முதல்வர் ஸ்டாலின்) கூச்சமே இல்லாமல் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். போலீசாருக்கு எதிராக யாருமே பேசக்கூடாது என்ற அராஜக சூழ்நிலை தமிழகத்தில் நடக்கிறது.block_Y
காட்டாட்சி
தமிழகத்தில் காட்டாட்சி நடக்கிறது. கடத்தல் செய்யும் அதிகாரிகளை எல்லாம் பதவியில் அமர்த்தி விட்டு மன்னிப்பு கேட்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். இந்த அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எதற்கு நாட்டை ஆள்கிறார். போலீஸ் திட்டமிட்டு செய்கிறது. முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவுகளை போலீசார் மதிப்பதில்லை. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு பணி கொடுத்தால் எப்படி பயம் வரும். அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியாத முதல்வர் எப்படி நாட்டை ஆள்வார் என்று யோசித்துப் பாருங்கள்.
தனிப்படைகள்
அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்க வில்லை. தனிப்படைகளை கலைத்தது வரவேற்கத்தக்கது. இதனை முன்பே செய்திருக்க வேண்டும். ஏனென்றால், தனிப்படைகள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி, செயல்படுகிறது. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறினார்.






மேலும்
-
த.வெ.க., ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் திடீர் அனுமதி
-
'ஆபர்' பெயரில் விலை குறைப்பால் ஓட்டல் ஓனர்கள் அலறல்
-
தேர்தலில் நிற்பதை தவிர வழியில்லை; தொழில்துறையினர் அறிவிப்பு
-
கடத்த பதுக்கிய 30 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
-
கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு கடலுக்கு செல்லும் உபரி நீர்; புதிய தடுப்பணைகள் அவசியம்
-
கஞ்சா செடியின் விதைகள், இலைகள் வைத்திருப்பது குற்றமல்ல: கோர்ட்