வாலிபர் குத்திக்கொலை தந்தை, மகனுக்கு 'கம்பி'

அரியலுார் : அரியலுார் அருகே வாலிபரை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

அரியலுார் மாவட்டம், கண்டிராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித், 30. நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, அங்குள்ள பெட்டிக்கடைக்கு சென்றுள்ளார். கடை உரிமையாளரான பாலகிருஷ்ணன், 55, என்பவரின் பேத்தி, அங்கு விளையாடிக் கொண்டிருந்தார்.

ரஞ்சித், பெண் குழந்தையை தலைகீழாக துாக்கி விளையாடியதால், பாலகிருஷ்ணன் அவரது மகன் பாலாஜி, 30, ஆகியோர் ரஞ்சித்தை கண்டித்துள்ளனர். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் பாலகிருஷ்ணன், பாலாஜி ஆகிய இருவரும் சேர்ந்து, ரஞ்சித்தை கத்தியால் குத்தியுள்ளனர். தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், ரஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருமானுார் போலீசார் தந்தை, மகனை கைது செய்தனர்.

Advertisement