பூட்டிய வீட்டை நோட்டமிட்டு நகை, பணம் திருட்டு

ரிஷிவந்தியம்; அவிரியூர் கிராமத்தில் பட்டபகலில் பூட்டிய வீட்டை திறந்து பீரோவில் இருந்த தங்க நகை, பணம் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
வாணாபுரம் அடுத்த அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ராஜா (எ) முத்துராஜா, 39; கார் டிரைவர். இவர் நேற்று காலை சவாரிக்காக சென்னைக்கு சென்றார்.
அரசு பள்ளியில் 7 ம் வகுப்பு பயிலும் அவரது மகள் பள்ளிக்கு சென்ற பிறகு, காலை 10:30 மணிக்கு, ராஜா மனைவி நித்யா, 35; வீட்டை பூட்டி, சாவியை அங்கேயே வைத்து விட்டு பகண்டை கூட்ரோட்டிற்கு சென்றார்.
மதியம் 1:00 மணியளவில் சாப்பிடுவதற்காக மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சாவி கீழே கிடந்தது. சாவியை எடுத்து வீட்டை திறந்து பார்த்தபோது, அறை கதவு மற்றும் 2 பீரோக்கள் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கத்தினர் வந்து பார்த்ததில், மர்ம நபர்கள் பூட்டிய வீட்டை திறந்து, 3 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1,500 பணத்தை திருடி சென்றது தெரிந்தது.
தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார், வீடு புகுந்து திருடியவர்களை தேடி வருகின்றனர்.
மேலும்
-
ஐகோர்ட் மதுரைக்கிளை எழுப்பிய கேள்விக்கு இதுவரை பதில் வரவில்லை; சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு
-
இந்திய வம்சாவளி பெண் கொலை : பிரிட்டனில் 23 வயது வாலிபர் கைது
-
சாட் ஜிபிடியை நம்பக்கூடாது': உருவாக்கியவரே சொல்கிறார்
-
மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,
-
திருப்புவனம் வழக்கில் திடீர் திருப்பம்; புகார் தந்த டாக்டர் மீது மோசடி வழக்கு; பின்னணி விவரம்!
-
புதிய தலாய்லாமாவை தேர்வு செய்ய எங்கள் அனுமதி வேண்டும்: சொல்கிறது சீனா